வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (08:58 IST)

அவமானங்களை சந்தித்த நரகாசுரன் நடிகர்..

2013 ஆம் ஆண்டு வெளியான 'யாருடா மகேஷ்' படம் மூலம் அறிமுகமானவர் சந்தீப் கிஷன். 

 
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க கடுமையாகப் போராடி வரும் அவர் மாநகரம் படம் மூலம் பிரபலமானார் தற்போது நரகாசுரன் படத்தில் நடித்துள்ளார். 
 
இவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில்  பேட்டி அளித்துள்ளார் . அதில் அவர், 'தெலுங்கு துறையில இருக்கிற பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு என் மாமா. 
 
இவர் சினிமா துறையில இருக்கிறதுனால நான் கஷ்டப்படாம சினிமாவுக்கு வந்துட்டதா சிலர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. உண்மை அது இல்லை. நான் நிறைய ஆடிஷன்ஸ்ல கலந்துக்கிட்டு பல அவமானங்களைத் தாண்டிதான் சினிமாவுக்கு வந்திருக்கேன். ஜோதிகாவுக்கு அண்ணனா நடிக்க சிம்பு படத்துல சான்ஸ் கிடைக்குமானு கேட்ட காலமெல்லாம் உண்டு' என்றார்.