திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (20:00 IST)

ரஜினியோடு என்னை ஒப்பிட வேண்டாம்: நான் சந்தர்ப்பவாதி அல்ல: கமல்ஹாசன்

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தன்னை ரஜினியுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானர்கள் என்றும் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
ரஜினியுடன் கமல்ஹாசனை ஒப்பிட முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், ' ஜான் வெய்ன் - மர்லின் பிரான்டோ மற்றும் சார்லி சாப்லின் - ஜான் வெய்ன் ஆகியோர்களை யாரும் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டால் அது ஒரு பொருத்தமற்ற ஒப்பீடு ஆகும். இவர்கள் அனைவரும் அவரவர் பாணியில் உயர்வானவர்கள். அதேபோல்  ரஜினியுடன் என்னை ஒப்பிடுவது நியாயமல்ல' என்று கூறினார்
 
அதேபோல் இன்னொரு கேள்விக்கு பதிலளித்த கமல், சரியான நேரத்தில் நான் அரசியலுக்கு வந்ததால் என்னை சந்தர்ப்பவாதி என்று சிலர் கூறுகின்றனர். நான் சந்தர்ப்பவாதி அல்ல. எனக்கு என்று ஒரு தொலைநோக்கு பார்வை உண்டு' என்று கூறியுள்ளார்.