திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (09:13 IST)

நடிகர் சூரியின் உணவகத்தில் வணிகவரித்துறையினர் ரெய்ட்!

நடிகர் சூரி மதுரை உள்ளிட்ட இடங்களில் சில உணவகங்களை நடத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான சூரி நடிப்பு மட்டும் இல்லாமல் ஹோட்டல் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். அப்படி மதுரையில் காமராஜ் நகர் பகுதியில் அவர் நடத்திவரும் ஹோட்டலில் வணிக வரித்துறையினர் ரெய்ட் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த உணவகத்துக்காக வாங்கிய சில பொருட்களுக்கு வணிக வரி கட்டவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து இந்த ரெய்ட் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ரெய்ட் நேற்றிரவு நடந்ததை அடுத்து இன்று அலுவலகத்தில் ஹோட்டல் நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.