நடிகர் சிவகார்த்திகேயன் நம்மாழ்வார் விருதுக்குத் தேர்வு !!
தமிழ் சினிமாவில் இளம்நடிகர் சிவகார்த்திகேயன் நம்மாழ்வார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம்நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகப் பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண்மை திருவிழாவில், ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் அவர்களின் மருத்துவச் செலவும்ன் மற்றும் அவரது மகனின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.