சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்? அதிர்ச்சி தகவல்..!
நடிகர் சத்யராஜின் வீட்டில் உள்ள முக்கிய நபர் கடந்த நான்கு ஆண்டுகால கோமாவில் இருப்பது குறித்து, அவரது மகள் திவ்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் பரவி உள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சத்யராஜுக்கு மனைவி மகேஸ்வரி மற்றும் இரு குழந்தைகள் சிபி, திவ்யா உள்ளனர். சிபி தமிழ் திரைப்படங்களில் நடிகராக உள்ளார், அதே சமயம் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர் ஆவார்.
திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "என் அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார். வீட்டிலேயே நாங்கள் அவரை கவனித்து வருகிறோம். மனதளவில் மிகுந்த சோகம் இருந்தாலும், நாங்கள் உறுதியுடன், நேர்மறையான எண்ணத்துடன், அம்மா விரைவில் சிகிச்சை மூலம் குணமடைவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். எங்கள் அம்மா நிச்சயம் நம்மிடத்தில் மீண்டும் திரும்புவார் என நம்புகிறோம்.
கோமா நிலை காரணமாக, அப்பா தற்போது குடும்பத்தை வழிநடத்தி வருகிறார். அவர் தாயாரை சில ஆண்டுகளுக்கு முன் இழந்தபின்னர், நான் அப்பாவுக்கு தாய் போல் இருந்து வருகிறேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு வழங்கி, வருகிறோம் என்று தெரிவித்தார்.
இந்த பதிவு வெளிவந்ததும், ரசிகர்கள், "உங்கள் அம்மா விரைவில் குணமடைவார்," என்று ஆறுதலான கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
Edited by Siva