ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (07:38 IST)

எதிர்கொள்வோம்.. எதிரி கொல்வோம்.. சூர்யாவின் ‘கங்குவா’ டிரைலர்..!

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை மற்றும் தற்காலத்தின் கதை என இரண்டும் ஒன்று சேர்ந்து அமைக்கப்பட்டு இருக்கும் திரைக்கதை அம்சம் கொண்ட ‘கங்குவா’ திரைப்படத்தில் சூர்யாவின் பலவிதமான கெட்டப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

உலக தரத்தில் கிராபிக் காட்சிகள், கச்சிதமான திரைக்கதை அமைப்பு, தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசை, சூர்யாவின் மாஸ் நடிப்பு ஆகியவை படத்தின் பிளஸ் பாயின்ட் களாக பார்க்கப்படுகின்றன. மேலும், இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும் போது பணம் தண்ணீராக செலவழிக்கப்பட்டு உலக தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

எனவே, சூர்யாவின் திரையுலக வாழ்வில் இந்த படம் நிச்சயம் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி போன்ற படம் தமிழில் வரவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் விதமாக ‘கங்குவா’ அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படம் பாகுபலி போல் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva