புதன், 21 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (15:03 IST)

வதந்தி உண்மையானது. நடிகர் சரத்பாபு காலமானார்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகர் சரத்பாபு காலமானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உண்மையிலேயே காலமானார் என்ற தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
நடிகர் சரத்பாபு உடல்நல கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நலம் தேறிக் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்த நிலையில் திடீரென அவர் காலமானதாக சில நாட்களுக்கு முன் வதந்தி கிளம்பியது. இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் இது குறித்து விளக்கம் அளித்தனர். 
 
இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சரத்பாபுவின் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
பட்டினப்பிரவேசம், நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும் உள்பட பல திரைப்படங்களில் சரத் பாபு நடித்துள்ளார் என்பதும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என 200 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran