வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : சனி, 20 மே 2023 (08:45 IST)

சுந்தர் பிச்சையின் சென்னை வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல தமிழ் நடிகர் - யார் தெரியுமா?

சுந்தர் பிச்சையின் சென்னை வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல தமிழ் நடிகர் - யார் தெரியுமா?
 
தமிழ் நாட்டை சேர்ந்தவரான சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்து சென்னையில் குடிபெயர்ந்து படித்தார். அதன் பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார்.  2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்த சுந்தர் பிச்சை ஆரம்பத்தில் கூகுள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
 
இவர் தற்போது அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டதால் சென்னை உள்ள வீட்டை விற்றுவிடுபடி தன் அப்பாவிடம் கூறினாராம். அதையடுத்து சென்னை அசோக் நகர் பகுதியில் அந்த வீட்டை  நடிகரும் தயாரிப்பாளருமான C.மணிகண்டன் என்பவர் வாங்கி இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.