பொங்கல் வாழ்த்துகள் கூறிய நடிகர் ரஜினிகாந்த்
இன்று தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார்.
இதுகுறித்து அவர் விரிவான விளக்கம் அளித்த நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தான் திட்டவட்டமாக இனி அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவிட்டார்.
இருப்பினும் ரஜினிகாந்த் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்து தொடர்து பல்வேறு பிரபலங்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விலகிய கராத்தே தியாகாராஜன், ரஜினியின் நண்பராவார். அவர் பாஜக கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.ஆனால் தான் அக்கட்சில் இணையவில்லை. ஆனால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள். எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை கூறாமல் இருந்தால் ரசிகர்களுக்கு இப்போதைய அவருடைய முடிவு ஆதங்கத்தைக் கொடுத்திருக்காது, என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.