நடிகர் நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தமா? மணமகள் பிரபல நடிகை என தகவல்..!
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்துவிட்ட பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக கூறப்படுவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யா - சமந்தா திருமணம் நடந்த நிலையில் திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
சமந்தாவை பிரிந்த பின் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபியா துலிபாலா உடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் குறித்து சோபியா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின் இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள நிலையில் நடிகர் நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva