வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (17:01 IST)

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

கடந்த சில நாட்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகன் தேவை மற்றும் மணமகள் தேவை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்த ரகசியம் வெளியாகியுள்ளது. 
 
இந்த போஸ்டரில் உள்ள பார் கோடை ஸ்கேன் செய்தால் மணமகன் மற்றும் மணமகள் குறித்த விவரங்கள் வரும் என்று கூறப்பட்ட நிலையில் பலர் அதை ஸ்கேன் செய்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தற்போது இந்த போஸ்டர், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற புதிய சீர்கலுக்காக என்பது தெரிய வந்துள்ளது. 
 
ஜூலை முதல் வாரம் முதல் இந்த சீரியல் தொடங்க இருப்பதை அடுத்து இந்த சீரியல் உள்ள நாயகன் மற்றும் நாயகி ஆகிய இருவருக்கும் மணமகன் மற்றும் மணமகன் தேடும் கதை என்பதால் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva