திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (15:18 IST)

மீண்டும் நடிகர் சங்கத் தலைவராகும் நாசர்… ஆனால் விஷால் இல்லையாம்!

நடிகர் சங்கத்துக்குள் இருந்த முரண்பாடுகள் முடிவுக்கு வந்து மீண்டும் நாசரே தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சங்கத்துக்கு 2019 ஆம்  ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலை எதிர்த்து நடிகர்கள் சிலர் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி நடிகர்கள் விஷால், கார்த்தி மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திடீரென நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சங்கத்தில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் களையப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒருமனதாக மீண்டும் நடிகர் நாசரையே தேர்வு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஷால் மட்டும் மீண்டும் பொறுப்புக்கு வர முடியாதாம். அவருக்கு பதில் மற்றொருவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. நாசர் மறுபடியும் பதவியேற்ற பின்னர் நடிகர் சங்கக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது.