1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified வியாழன், 24 நவம்பர் 2022 (09:15 IST)

பழம்பெரும் இயக்குனரை சந்தித்த கமல்… வைரல் போட்டோஸ்!

தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனரான கே விஸ்வநாத் இப்போது வயது மூப்புக் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.

கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களான சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து மற்றும் பாச வலை ஆகிய படங்களை இயக்கியவர் கே விஸ்வநாத். இவர் இயக்கிய சங்கராபரணம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படங்களாக அமைந்தன.

இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் பல படங்களில் தோன்றியுள்ளார். கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது வயது மூப்புக் காரணமாக அவர் சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொள்வதில்லை. இந்நிலையில் அவரின் வீட்டுக்கு சென்று கமல்ஹாசன் அவரை சந்தித்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து “நெகிழ்ச்சியான தருணம்” எனக் கூறியுள்ளார்.