வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (20:44 IST)

நடிகர் தனுஷ் பட ஷூட்டிற்கு தடை விதித்த கலெக்டர்

தென்காசியில் நடிகர் தனுஷ் பட ஷுட்டிங் நடைபெற்ற நிலையில், மாவட்ட கலெக்டர் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக இப்படத்தின் ஷூட்டிங், தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் இருந்து செல்லும் வழியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று இப்பகுதியில்,  குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அப்பகுதியில் புகை சூழ்ந்த நிலையில்,  தனுஷ் பட ஷூட்டிங்  நடைபெற்று வந்துள்ளது.

ஆனால், இதற்கு முறைப்படி தனுஷ் பட குழுவினர் பெறவில்லை என்று கூறப்படுகிறது,. எனவே, தென்காசி மாவட்டம் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ''கேப்டன் மில்லர்'' பட ஷூட்டிங்கை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

விரைவில் மதுரையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.