செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (19:26 IST)

தனுஷின் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் குண்டு வெடிப்பு... பதறி ஓடிய மக்கள்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் வரலாற்று பாணியில் உருவாகி வருகிறது. 
 
தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கும் இப்படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டன் துறையில் நடைபெற்று வந்தது. 
 
படப்பிடிப்பின் தேவைக்காக வனப்பகுதியில் டம்மி குண்டுகளை வெடிக்கவைத்தும், தீ மூட்டி சில காட்சிகளை எடுத்துள்ளனர். இது விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் படப்பிடிப்பை  நிறுத்தியுள்ளார்.