வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (10:19 IST)

சல்மான் கானோடு மோதும் தமிழ் நடிகர்… மும்பைக்குப் பயணம்!

நடிகர் சல்மான் கான் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரபுதேவா பாலிவுட்டில் மிகவும் பிஸியான இயக்குனர். அடுத்தடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கொரோனா காரணமாக சல்மான் கான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுத்துள்ளாராம். ஆனால் இப்போது அந்த படத்துக்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் பிரபுதேவா.

இந்த படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக தமிழ் நடிகர் பரத் நடிக்கிறார். இப்போது அந்த படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை பயணித்துள்ளார் பரத். நீண்ட நாட்களாக வெற்றிப்படம் இல்லாமல் இருக்கும் பரத் இந்த படம் தனக்கு மிகவும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்பில் உள்ளார்.