வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:07 IST)

உங்கள் படத்தின் கதாநாயகன் நான்… எஸ் பி பிக்கு நன்றி சொன்ன சல்மான் கான்!

பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவருக்கு நடிகர் சல்மான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று மீண்டும் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவர் மீண்டுவர அனைவரும் வாழ்த்துகளையும் பிராத்தனைகளையும் செய்துவரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் எஸ் பி பிக்கு நன்றி தெரிவித்துள்ளார். சல்மான் கானின் ஆரம்ப கால படங்களுக்கு பாடல்களை பாடியவர் எஸ்பி பி. அதைக் குறிக்கும் பொருட்டு சல்மான் கான் ’ பாலசுப்ரமணியம் சார்.. நீங்கள் சீக்கிரம் குணமடைய உங்களுக்கு எல்லா வலிமைகளும் கிடைக்க என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன். எனக்காக நீங்கள் சிறப்பாக பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி, உங்கள் தில் தீவானா ஹீரோ பிரேம், லவ் யூ சார்’ எனக் கூறியுள்ளார்.