செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (09:08 IST)

நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி இயற்கை எய்தினார்!

தமிழ் சினிமாவின் பிரபலமான கதாநாயகியான ஸ்ரீப்ரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி இயற்கை எய்தியுள்ளார்.

பரதநாட்டிய குருவான கிரிஜா பக்கிரிசாமி, நடன உலகில் பிரசித்தி பெற்றவர். அதுமட்டுமில்லாமல், இவர் சில படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இவரின் மகள்தான் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீப்ரியா. இவருக்கு ஸ்ரீப்ரியா தவிர்த்து இன்னொரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் வயது மூப்புக் காரணமாக தற்போது இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 88. அவரது உடல் மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.