திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2023 (18:21 IST)

சூப்பர் ஸ்டார் படத்திற்கு குவியும் எதிர்ப்பு

kadhal the core
சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள காதல் தி கோர் படத்தில் தன்பாலின காட்சிப்படுத்த கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என  கேரளா கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. 
 
மலையாள சினிமாவில்  கடந்த 23 ஆம் தேதி வெளியான படம் காதல் தி கோர். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜியோ பேபி இப்படத்தை இயக்கியிருந்தார். மேத்யூ புலிக்கன் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தில் மேத்யூ ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என ஓமணா விவாகரத்து கேட்டிருக்கிறார். இதில்,மேத்யூவுக்கு ஓமணாவிய பிரியவும் மனமின்றி இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கிளைமேக்ஸ்.
 
சினிமா துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட பல தரப்பிலும்  இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
இந்த நிலையில், ரசிகர்களிடமும், சினிமாத்துறையினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளள காதல் தி கோர் படத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
கேரளம் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்த அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காதல் தி கோர் படம் கிறிஸ்துவ  உணர்வுகளுக்கு எதிராக உள்ளது,. தன்பாலின காட்சிப்படுத்த கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.