செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (13:53 IST)

சூப்பர் ஸ்டார் மகளை இன்ஸ்பைர் செய்த ஆலியா பட்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும், ரன்பீர் கபூரின் மனைவியுமான ஆலியா பட்டை சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகள் சுஹானா கான் பாராட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: 

''நடிகை ஆலியா பட் தனது பிறந்த நாளில் அணிந்த புடவையை அவர், தேசிய விருது வழங்கும் விழாவில் மீண்டும் அணிந்திருந்தார்.  இதன் மூலம் புதிய ஆடைகளை அணியும்போது, கழிவுகள் வெளியாகிறது என்பதை நான் உணரவில்லை. ஆலியாவின் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில் இருந்தது.
 
சமூதாயத்தில் பெரிய இடத்தில் உள்ள ஆலியாவே ஏற்கனவே அணிந்த உடையை உடுத்துகீறார். எனவே நாமும் பார்ட்டி அல்லது, மற்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லுகையில் ஆலியா பட்டை பின்பற்றி ஏற்கனவே அணிந்த  உடையை அணியலாம் என்ற உந்துதலை தருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.