1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 மார்ச் 2017 (18:11 IST)

ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை பார்ட் 2 ரெடி!!

இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன். 


 
 
தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார். 
 
இவருடைய இயக்கத்தில் பலரால் விமர்சிக்கப்பட்ட புதுப்பேட்டை, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகத்திற்கான கதையை செல்வராகவன் எழுதி முடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
படங்கள் இயக்காமல் வீட்டில் இருந்த இருந்த சமயத்தில் இப்படத்தின் கதைகளை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போதைக்கு இந்த இரண்டு படங்களையும் இயக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.