புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (13:20 IST)

ஜெயம் ரவியின் மனைவி மூன்றாவது முறை கர்ப்பமா ?அவரே கூறிய விளக்கம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. 
 
அதையடுத்து, மழை, எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தாம் தூம், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். 

இவர் கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
அதற்கு காரணம் ஜெயம் ரவியுடன் ஆர்த்தி வெளியிட்ட சமீபத்திய புகைப்படத்தில் அவர் வயிறு பெரிதாக இருந்தது. இதற்கு பதறிப்போய் விளக்கம் அளித்துள்ள ஆர்த்தி, ஐயோ... அப்படியெல்லாம் எதுவும் இல்ல அது போட்டோ கிராபர் அப்படி எடுத்திட்டாக நானும் நடந்து வந்து அப்படியே நின்று போஸ் கொடுத்தது இப்படி தெரிஞ்சிடுச்சு என கூறியுள்ளார்.