1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (15:54 IST)

அடங்கமறு இயக்குனரை அலையவிடும் ஜெயம் ரவியின் மாமியார்!

ஜெயம் ரவிக்கு அடங்கமறு என்ற மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தவர் கார்த்திக் தங்கவேல்.

ஜெயம் ரவி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் அடங்கமறு. அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கி இருந்தார். இப்போது அவர் விஷாலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் அடங்கமறு படத்தின் வெற்றியால் அந்த படத்தின் ரீமேக் உரிமைக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. ஒரு இந்தி பட நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ரீமேக் உரிமையை படத்தின் தயாரிப்பாளரும் ஜெயம் ரவியின் மாமியாருமான சுஜாதாவால் விற்பனை செய்துள்ளார். அந்த தொகையில் 40 சதவீதமான 40 லட்சத்தை படத்தின் இயக்குனருக்கு தரவேண்டும். ஆனால் அதைக் கொடுக்காமல் படத்தின் தயாரிப்பாளர் இழுத்தடித்து வருகிறாராம். இதனால் இயக்குனர்கள் அல்லது கதாசிரியர் சங்கத்தில் புகார் செய்ய கார்த்திக் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.