1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (19:50 IST)

அரசியலுக்கு வரும் அஜீத் ; தமிழக வளர்ச்சிக்கான வரைபடம் தயார் : நடிகர் ஆரி தகவல்

நடிகர் அஜீத் விரைவில் அரசியலுக்கு வருகிறார் என நடிகர் ஆரி தெரிவித்துள்ள கருத்து அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


 
மாயா, நெடுஞ்சாலை, நாகேஷ் தியேட்டர் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி. சமீபத்தில் இவர் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது “ நடிகர் அஜீத் விரைவில் அரசியலுக்கு வருவார். தமிழகத்தின் வளர்ச்சிக்கான வரைபடத்தை அவர் தயாராக வைத்துள்ளார்.



வெளிநாடுகளில் எந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதோ அதுபோல் அவரும் செயல்படுவார். அவருக்கு நெருக்கமான நபர் ஒருவர் என்னிடம் இதை கூறினார்” என கொளுத்திப் போட்டுள்ளார்.

 
இவரின் இந்த பேச்சு அஜீத் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.