10 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியில் ரீமேக் ஆகும் ஆரண்யகாண்டம்!
ஆரண்யகாண்டம் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன்னணி நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான சிறப்பான படங்களில் ஆரண்ய காண்டம் திரைப்படமும் ஒன்று. இந்த படம் வெளியான போது கவனம் பெறாமல் பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம். இந்நிலையில் இப்போது இந்த படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அந்த படத்தைப் பற்றிய நினைவுகளைக் கொண்டாடி வருகின்றனர்.
திரையரங்க வெளியீட்டின் போது வெற்றி பெறாத ஆரண்யகாண்டம், இப்போது பரவலான கவனத்தைக் குவித்து வருகிறது. இந்நிலையில் இந்தியில் இந்த படம் இப்போது ரீமேக் செய்யப்பட உள்ளது. ரீமேக் உரிமையை இந்தி திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான டிப்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தில் பணிபுரிய உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.