ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (17:39 IST)

அந்த படத்துக்கு இரண்டு கிளைமேக்ஸா? 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆரண்ய காண்டம்!

ஆரண்யகாண்டம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதனை சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் வெளியான சிறப்பான படங்களில் ஆரண்ய காண்டம் திரைப்படமும் ஒன்று. இந்த படம் வெளியான போது கவனம் பெறாமல் பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம். இந்நிலையில் இப்போது இந்த படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அந்த படத்தைப் பற்றிய நினைவுகளைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்துக்காக தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் மற்றும் பிரவீன் ஆகியோர் படத்தைப் பற்றி பேசும்போது ‘இந்த படத்துக்கு நாங்கள் இரண்டு கிளைமேக்ஸ்களை வைத்திருந்தோம். இறுதியில் சுப்பு லாரியில் அடிபட்டு சாவது போல ஒன்று யோசித்தோம். இந்த படத்தின் தீமே ஒரு நபர் கீழிருந்து மேலே வந்து வெற்றி பெறுவதுதான்.  அதனால் சுப்பு சாவது போல அமைத்திருந்தால்  ரசிகர்கள்க்கு உற்சாகம் கிடைத்திருக்காது. அதனால் குமாரராஜா முதலில் யோசித்த க்ளைமேக்ஸையை வைத்தோம்’ எனக் கூறியுள்ளனர்.