திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (22:20 IST)

‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி அவசர வழக்கு: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த படம் மிக எதிர்பார்ப்புக்குரிய இந்திய படம் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்னொருவரின் கதையை திருடி படத்தை இயக்கியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டதை அடுத்து இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே விஜய் நடித்த முந்தைய படமான 'மெர்சல்' திரைப்படமும் கதையை திருடி எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 'சர்கார்' படமும் கதைத்திருட்டு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் விஜய் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக அவரது தரப்பினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.