வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (20:47 IST)

சாருஹாசனின் 'தாதா 87': உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக நடக்கும் விஷயம்

இதுவரை உலக சினிமா வரலாற்றில் திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது மற்றும் மது அருந்துதல் உயிரை குடிக்கும் ஆகிய இரண்டு டைட்டில் கார்டுகள் மட்டுமே போடப்பட்டிருப்பதை அனைவரும் பார்த்திருக்கின்றோம்,

ஆனால் உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக சாருஹாசனின் 'தாதா 87' திரைப்படத்தில், படம் ஆரம்பிக்கும் முன் 'பெண்களை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும்' என்ற டைட்டில் கார்டு தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் காண்பிக்கப்படுகிறது. இந்த டைட்டில் கார்டை போட சென்சாரும் அனுமதியளித்துள்ளது என்பதும், இதற்காக சென்சார் அதிகாரிகளுக்கு 'தாதா 87' குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் தாதா 87 படத்தில் கீர்த்திசுரேஷின் பாட்டி சரோஜா மற்றும் ஜனகராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜய்ஸ்ரீ இந்த படத்தை இயக்கியுள்ளார்.