திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 6 மே 2018 (08:41 IST)

ரஜினி ஒரு கடவுள், அவர் நிச்சயம் முதல்வராவார்: சாருஹாசன்

ரஜினியை மக்கள் கடவுளாக பார்த்து வருகிறார்கள் என்றும், எனவே அவர் நிச்சயம் முதல்வர் ஆவார் என்றும் சாருஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
சமீபத்தில் நடிகர் சாருஹாசன் தனது ஃபேஸ்புக்கில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் தான் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கர்நாடகத்தை சேர்ந்த நபர் ரஜினிதான் என்றும், அவர் கட்சி ஆரம்பித்து அரசியலில் இறங்கினால் நிச்சயம் தமிழக முதல்வராக வருவார் என்றும் தெரிவித்தார்.
 
கமலுக்குக் முதல்வர் ஆகும் வாய்ப்பே இல்லை என்றும், அவரிடம் மக்கள் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பதாகவும், ஆனால் ரஜினியை நீங்கள் ஏன் இன்னும் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்பதாகவும் கூறிய சாருஹாசன், திராவிட கலாசாரம் தமிழகத்தில் இருக்கும் வரை பார்ப்பனர்கள் முதல்வராக வர வாய்ப்பில்லை என்றும், அதனால் கமலுக்கு வாய்ப்பில்லை என்று கூறுவதாகவும் சாருஹாசன் தெரிவித்தார்.
 
மேலும் தான் கமலுக்கு எந்தவித அறிவுரையும் கூற விரும்புவதில்லை என்றும் தொழிலில் சீனியர் ஜூனியர் என்றெல்லாம் கிடையாது என்றும் கூறிய சாருஹாசன், கமல்ஹாசன் நான் ஏதாவது அறிவுரை கூறினால் கேட்கும் மனநிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.