1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (12:47 IST)

'ஆண் கழிவறையில் பெண் உட்காருவது' - சபரிமலை விவகாரத்தில் சாருஹாசன் சர்ச்சை கருத்து

சபரிமலை விவகாரத்தில் பெண்கள் சம உரிமை கேட்பது என்பது ஆண் கழிவறையில் பெண் உட்காருவது போன்றது என நடிகர் சாருஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். 

 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்தி வருகிறது கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  கேரளாவில் சபரிமலை விவகாரத்தால் தினமும் பதற்றமான நிலை காணப்படுகிறது. 
 
இந்நிலையில் கமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன், சபரிமலை குறித்து வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "சபரிமலைக்கு செல்வதில் பெண்கள் கேட்கப்படும் சமத்துவம் ஒரு தவறான சமத்துவம். அது பெண்கள் ஆண்களின் பொதுக் கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை.  அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம்" இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.