Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசமான சுவையில் ஜாங்கிரி செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (15:03 IST)
தேவையான பொருள்கள்:

உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
உணவு நிறமி (ஃபுட் கலர்) - ஒரு சிட்டிகை
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும்.

கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை வைத்து, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.

இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும். சுவையான, ஜாங்கிரி தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments