Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான தர்ப்பூசணி அல்வா செய்ய !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:39 IST)
வெல்ல துண்டுகள் - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்
நெய் - 50 கிராம்
முந்திரி - 10
ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை:
 
முதலில் முந்திரியை எடுத்து நெய் விட்டு நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு தர்ப்பூசணியில் உள்ள சிவப்புச் சதைப் பகுதியை தனியாக எடுத்து விதைகளை மட்டும் நீக்கிவிட்டு, துண்டாக்கி, மிக்ஸில் போட்டு கூழாக அரைத்து வைத்துக்கொள்ளவும். தேவையானவெல்லத்தை இடித்து தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
 
முதலில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெல்லக் கரைசலை போட்டு பாகு காய்ச்சி பாதிபதம் வந்த பின்பு, இதனுடன் தர்ப்பூசணிக் கூழ் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவைக்கவும். இடையில் சிறிது சிறிதாக நெய் ஊற்றி, நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு நன்றாக வெந்து ஒட்டாமல்   சுருண்டு வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பு போட்டு இறக்கவும்.
 
பின்னர் ஒரு தட்டில் நெய் தடவி அதில் தயார்செய்த அல்வாவை பரவலாக வைத்து, ஆறியவுடன் நாம் விரும்பும் அளவில் துண்டுகள் போட்டு சூடாக பரிமாறவும். சுவையான தர்ப்பூசணி அல்வா தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments