சுவையான இனிப்பு மைதா பிஸ்கட் செய்ய !!
தேவையான பொருட்கள்:
பால் - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
நெய் - 3/4 கிண்ணம்
மைதா - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். பால், சர்க்கரை, நெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கவும். இதனுடன் மைதாவை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.
மைதா தேவையான அளவு என்று சொன்னாலும், சரியான பக்குவத்தில் இருந்தால் 3 கிண்ணம் மைதா தேவைப்படும். விஸ்க்கால் கலக்கும்போதே மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். அப்பொழுது இரண்டரை கிண்ணம் மாவு சேர்த்து பிசைய வேண்டும்.
பிசைந்தமாவை காற்றுப்புகாமல் அரைமணி நேரம் மூடிவைக்கவும். மிதமான சூட்டில் எண்ணெய் காயவைக்கவும். பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக்கி, தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும். கத்தி கொண்டு சிறு சதுரங்களாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான இனிப்பு மைதா பிஸ்கட் தயார்.