Daily Horoscope
✕

சுவை மிகுந்த சேமியா பாயசம் செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (16:41 IST)
சேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம்.


தேவையான பொருட்கள்:

சேமியா - 1/2 கப்
சக்கரை - 1/2 கப்
பால் - 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 6
உலர் திராட்சை - 12
ஏலக்காய் - 1
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 2 கப்


செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில், நெய் சூடு செய்து, மிதமான தீயில், முதலில் உடைத்த முந்திரிப் பருப்பை, பொன்னிறமாக வறுக்கவும். வறுபட்டதும், திராட்சையை சேர்த்து, உப்பும் வரை பிரட்டவும். தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.

அதே நெய்யில், சேமியாவை சேர்த்து வறுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாகவே வைத்துக்கொள்ளவும். பொன்னிறமாக ஆங்காங்கே மாறியதும், தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வறுத்த சேமியா சேர்க்கவும். சேமியாவை தூவினாற்போல சேர்த்து, கலக்கவும். இல்லை என்றல் கட்டி பிடிக்கும். சேமியா மிருதுவாக வேகும் வரை கொதிக்கவிடவும். சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கவும். 2 நிமிடங்கள் மேலும் கொதிக்க விடவும். மிதமான தீயில் வைத்து, பால் சேர்க்கவும். கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். சுவை மிகுந்த சேமியா பாயசம் தயார்.

Edited by Sasikala
 

எல்லாம் காட்டு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments