சுவை மிகுந்த சர்க்கரை பொங்கல் செய்ய தெரியுமா...?
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாகு வெல்லம் - 1 கப்
பாசி பருப்பு - கால் கப்
நெய் - 100 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
முந்திரி பருப்பு - தேவையான அளவு
உலர் திராட்சை - தேவையான அளவு
பச்சை கற்பூரம் - சிறதளவு
செய்முறை:
பச்சரிசி, பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து 10 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஊறவைத்த பச்சரிசி மற்றும் பாசி பருப்பை குக்கரில் சேர்த்து குழைவாக வேக வைத்து கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் 1 கப் பாகு வெல்லத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வேகவைத்து பச்சரிசியுடன் சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் வறுத்த முந்திரி திராட்சையை சர்க்கரை பொங்கலுடன் சேர்த்து கொள்ளவும். சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கி பரிமாறினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.