1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (17:15 IST)

உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த எள் உருண்டை செய்ய !!

Sesame Ball 1
தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் - 4 கப் அல்லது கருப்பு எள்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் - 6
நெய் - சிறிதளவு



செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதனை சிறிது மொற மொறப்பாக அரைக்கவும்.

அடுத்து ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு இடைவிடாது வறுத்து பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரையை பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள்.நெய் அல்லது நல்லெண்ணெய் தொட்டு உருண்டையாக பிடிக்க வேண்டும். தேவையெனில் மிகக்குறைந்த அளவு வெல்லம் சேர்த்து பாகாக்கி விட்டு பிடிக்கலாம்.

குறிப்பு: சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் செய்யலாம். பாகு செய்யும் முன் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து பாகு செய்யலாம். இதனால் வெல்லத்தில் இருக்கும் கல் நீக்கப்படுகிறது. மேலும் எள்ளுவை பொடிக்காமலும் சேர்த்து உருண்டை செய்யலாம்.