அவல் பாயாசம்

அவல் பாயாசம்


Sasikala|
தேவையான பொருட்கள்:
 
தேங்காய் பால் - 300 மில்லி
அவல் - 1/4 கிலோ
பால் - 1/2 லிட்டர்
திராட்சை - 12
முந்திரிப்பருப்பு - 12
ஏலக்காய் பொடி - சிறிதளவு
பச்சை கற்பூரம் - சிறிதளவு
சர்க்கரை - 1/4 கிலோ
நெய் - 100 கிராம்

 
 
செய்முறை:
 
திராட்சை, முந்திரி பருப்பை நெய்யில் பொரித்து கொள்ளவும். அதிலேயே அவலும் சேர்த்து பொன் நிறமாக வறக்கவும்.
 
பாலை நன்றாக காய்ச்சி அதில் அவலை சேர்த்து வேகவிடவும். பிறகு நெய்யில் பொரித்து வைத்துள்ள முந்திரி, அவல், திராட்சையை போடவும். 
 
பச்சை கற்பூரம், ஏலக்காய்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து கிண்டவும். தேங்காய் பாலை திக்காக ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும் பின் பொங்கியவுடன் இறக்கிவிட வேண்டும். பின்னர் அவல் பாயாசம் தயாராகி விடும். இந்த அவல் பாயாசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :