கொரோன காலத்தில் ரொம்ப பயமா இருக்கு - மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!

Written By Papiksha Joseph
Updated: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (16:09 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். எனினும் எந்தவித டென்க்ஷனும் இன்றி சிங்கிள் பெண்ணாக ஜாலியாக சுற்றி வருகிறார்.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் ஸ்ருதி ஹாசன் "  கொரோனா காலத்தில் ஷூட்டிங்கை தொடங்குவது பயமாக இருக்கிறது என்றும். இருந்தாலும் பலரது வாழ்வாதாரங்கள் இந்த தொழிலை நம்பிதான் இருக்கிறது. எனவே மக்கள் கவனமாகவும் பொறுப்புடனும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஸ்ருதி ஹாசன் தற்போது ஐதராபாத்தில் உள்ள படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

தட்டி விடாதீங்க!.. தட்டி கொடுங்க!.. தேசிய விருது எதிர்ப்புக்கு தனுஷ் பதிலடி!...

கமலின் அடுத்த படம் இதுதான்!.. அவர்தான் டைரக்டரா?.. வெளியான அப்டேட்!...

ஜீ5 ஓடிடியில் நயன்தாராவின் 2 திரைப்படங்கள் மற்றும் டிமான்டி காலனி 3.. சூப்பர் அறிவிப்பு..

ஹெச்.வினோத்தை சந்தித்த ஜேசன் சஞ்சய்!.. வைரல் வீடியோ..

200 கோடியை நெருங்கிய ஜனநாயகன்!.. 3 நாள் வசூல் அப்டேட்...

அடுத்த கட்டுரையில்
Show comments