India beats Ireland Comfortably | ரோஹித் அரைசதம்; இந்தியா எளிதில் வெற்றி
டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற ஐ.சி.சி. உலகக் கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தன் இரண்டாவது வெற்றியை ஈட்டியது. ரோஹித் ஷர்மா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அயர்லாந்து நிர்ணயித்த சுமாரான 113 ரன்கள் இலக்கை, கம்பீரும், ரோஹித் ஷர்மாவும் பதட்டமில்லாமல் துரத்தி 10.5 ஓவர்களில் 77 ரன்களை சேர்த்தனர்.
கம்பீர் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 31 பந்துகளில் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு தேவையில்லாமல் மீண்டும் தோனி களமிறங்கி ஒரு பவுண்டரியுடன் 13 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரோஹித் ஷர்மா தனது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஃபார்மை அப்படியே தொடர்ந்து ஆடி வருகிறார். அவர் 45 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 52 ரன்கள் எடுத்தார்.
யுவ்ராஜ் சிங் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அயர்லாந்து அணியில் வெஸ்ட் ஒரு விக்கெட்டையும், மெக்கல்லன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
3 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜாகீர் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.