1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. கட்டுரைகள்
Written By
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (08:34 IST)

அப்போ #ShameonYuvi… இப்போ #ProudofyouYuvi –அப்படி என்ன செய்தார் யுவ்ராஜ்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு உதவும் பொருட்டு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 13 நாட்கள் கடந்துள்ளன. இதனால் ஏழை மக்களின் தினசரி பிழைப்புப் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவ இயன்றவர்கள் நிதி கொடுக்குமாறு இந்திய பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். இதை முன்னிட்டு இந்திய அணியின்     முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது தொண்டு நிறுவனத்துக்கு யுவ்ராஜும், ஹர்பஜன் சிங்கும் நிதியுதவி அளித்து, அதற்காக ரசிகர்கள் அவர்களை மோசமாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.