திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (07:28 IST)

இணையத்தில் வைரலாகும் இந்தியாவின் 9 மணி சேட்டிலைட் புகைப்படம்

இந்தியாவின் 9 மணி சேட்டிலைட் புகைப்படம்
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு இந்தியாவில் உள்ள அனைவரும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி, டார்ச் லைட்டுக்களை ஆகியவற்றை ஏற்றுமாறு கூறியிருந்தார் 
 
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கோடிக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் நேற்று சரியாக 9 மணிக்கு மின் விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றினார்கள் என்பதும், இந்தியா முழுவதும் ஜோதியால் ஒளிர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்தியா ஜோதியில் ஒளிர்ந்த காட்சி சேட்டிலைட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இருட்டாக இருக்கும்போது இந்தியா மட்டும் தனியாக ஜோதியால் ஒளிர்வது அந்த சாட்டிலைட் புகைப்படத்தில் தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் தமிழகம் மட்டும் இந்த சேட்டிலைட் புகைப்படத்தில் சரியாக தெரியவில்லை. தமிழகத்தின் மேல் மேகங்கள் திரண்டு இருந்ததால் மேகங்கள் அந்த புகைப்படத்தில் தமிழகம் தெரியாதவாறு மறைத்து கொண்டதாக தெரிகிறது. இருப்பினும் இந்தியாவின் மற்ற பகுதிகள் அனைத்தும் அகல் விளக்குகளால் ஒளிர்வது இந்த சாட்டிலைட் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது