இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் ஸ்ரீசாந்த் மற்றும் யுவ்ராஜ் சிங் – சையத் முஷ்டாக் அலி கோப்பையில் இடம்!
சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஓய்வை திரும்ப பெற்ற யுவ்ராஜ் சிங் அதில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார்.
இந்திய அணிக்காக பல தொடர்களில் விளையாடி இரண்டு உலகக் கோப்பைகளை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் யுவ்ராஜ் சிங். அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று பஞ்சாப் அணிக்காக விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டார். அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் இப்போது அவர் அடுத்த ஆண்டு தொடங்க உள்ள சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான உத்தேச பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதே போல சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்தும் கேரள அணியில் சேர்க்கபட்டார். அவரின் தடைகாலம் சமீபத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.