உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இறுதிப்போட்டி தேதி மாற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இறுதிப்போட்டி தேதி மாற்றம்!
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் இந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 10ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் இந்த போட்டியின் ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவி9க்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவே இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியின் ஒரு பகுதி தான் பிப்ரவரி 5 முதல் தொடங்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 4 டெஸ்ட் போட்டிகள் என்பதும் இந்த போட்டியின் முடிவுகளில் பெறும் புள்ளிகள் இதில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது