மகளிர் டி20 உலகக்கோப்பை வங்கதேசத்தில் இருந்து மாற்றமா? எந்த நாட்டில் நடக்கும்?
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேறு நாட்டிற்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் அக்டோபர் மூன்றாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்திருந்த நிலையில் அந்த நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இலங்கை, ஜிம்பாப்வே அல்லது ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடத்த ஐசிசி திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் துபாய், அபுதாபி, சார்ஜா போன்ற உலக தரம் வாய்ந்த மைதானங்கள் இருப்பதால் அந்த நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஐசிஐசி விரைவில் இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran