சிஎஸ்கேவை பின்பற்றி தோல்வி அடைந்த பெங்களூரு: டிவில்லியர்ஸ் பேட்டி!
சிஎஸ்கேவை பின்பற்றி தோல்வி அடைந்த பெங்களூரு
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19ஆவது ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது
இந்த போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்ற போதிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் பெரும்பாலும் டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்து தோல்வி அடைந்துள்ள நிலையில் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் இது குறித்து பேட்டியளித்த பெங்களூரு அணியின் முக்கிய வீரர் டிவில்லியர்ஸ் கடந்த போட்டியில் சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றதை நாங்களும் பார்த்து இரண்டாவதாக பேட்டிங் செய்ய முடிவு செய்தோம்
அதேபோல் இதே மைதானத்தில் மும்பைக்கு எதிராக நாங்கள் விளையாடிய போது இரண்டாவது பேட்டிங் செய்த மும்பை அணி எங்களுடைய ஸ்கோரை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. அதன் காரணமாகவே நாங்கள் டாஸ் வென்றதும் முதலில் பந்து வீச தேர்வு செய்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்
சென்னை அணி சேஸிங் செய்து வெற்றி பெற்றது போல் நாமும் வெற்றி பெறலாம் என டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு அணிக்கு நேற்று தோல்வியே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது