செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (16:44 IST)

7 ஆண்டுகள் கழித்து சச்சினுக்கு பின் கோஹ்லி சாதனை

டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்தார்.

 
இந்திய அணி இங்லிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்திய அணி முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
 
முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்தார்.
 
2011ஆம் ஆண்டு சச்சின் முதலிடம் பிடித்தார். அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து தற்போது விராட் கோஹ்லி முதலிடம் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 
சச்சின், சேவாக், டிராவிட், கம்பீர் ஆகியோர் இதுவரை டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.