வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (16:38 IST)

மெஸ்ஸி தலைமை அர்ஜென்டினாவை வீழ்த்தியது உருகுவே! உலகக் கோப்பைக்கு பிறகு முதல் தோல்வி:

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்ற நிலையில் தற்போது உலக கோப்பைக்கு பின்னர் உருகுவே அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.

 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் 48 அணிகள் விளையாட உள்ள நிலையில் தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில்  உருகுவே  மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி அபார வெற்றி பெற்றது

உருகுவே அணி வீரர்கள் 41 வது மற்றும் 87 வது நிமிடங்களில் கோல்களை பதிவு செய்த நிலையில் மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா அணி வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை.  

உலக கோப்பைக்கு பின்னர் மெஸ்ஸி தலைமையிலான அணி உருகுவே அணியிடம் தோல்வி அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran