செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:15 IST)

நியூசிலாந்து வீரர்களை சாமியாராக்கிய உபி அரசு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 29ஆம் தேதி கான்பூரில் நடைபெறவுள்ளது. இதற்காக கான்பூருக்கு நியூசிலாந்து வீரர்கள் இன்று சென்றனர்.



 
 
இந்த நிலையில் நியூசிலாந்து வீரர்களை வரவேற்ற உபி அரசு, தீபாவளியை முன்னிட்டு நியூசிலாந்து வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்தது. அந்த பரிசு பாக்ஸில் வீரர்கள் அனைவருக்கும் காவி நிறத்தில் துண்டுகளும், உடைகளும் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி குங்குமபொட்டு, மாலை, பூ என அனைத்து பொருட்களும் காவி நிறத்தில் தரப்பட்டது. 
 
உபி அரசு கொடுத்த உடை, துண்டுகளை அணிந்த நியூசிலாந்து அணி வீரர்கள் அனைவரும் கிட்டத்தட்ட காவிச் சாமியார்கள் போலவே காட்சி அளித்தனர். சாமியார் உடையில் உள்ள நியூசிலாந்து வீரர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.