ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (18:07 IST)

16 மத்திய அரசு ஊழியர்கள் உள்பட 35 பேர் மீது வழக்கு: சிபிஐ அதிரடி ஏன் தெரியுமா?

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்குவது வழக்கமே. ஆனால் பல அரசு ஊழியர்கள் இந்த வீட்டை வேறொருவருக்க்கு வாடகைக்கு விட்டுவிட்டு தாங்கள் வேறு வீடுகளில் குடியிருப்பதுண்டு. அரசு ஒதுக்கிய வீட்டை வாடகைக்கு விடுவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் பல ஊழியர்கள் இதை செய்து வந்தனர்,.



 
 
இந்த நிலையில் சென்னையில் மட்டும் 35 ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை தனியார்களுக்கு வாடைகைக்கு விட்டுள்ளதாக கண்டுபிடித்து அவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 16 பேர் மத்திய அரசு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வேட்டை சென்னை மட்டுமின்றி மற்ற முக்கிய நகரங்களிலும் தொடரும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன