செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:40 IST)

இன்று சென்னை அணிக்கு போட்டி: முதல் வெற்றி கிடைக்குமா

csk
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் போட்டியிட இருக்கும் நிலையில் சென்னை அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்
 
ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெங்களூர் அணி மிக அபாரமாக நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறும் நிலையில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா அல்லது பெங்களூர் அணி தொடர் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்